எதிர்வரும் மணித்தியாலங்களில் சரணடையும் உக்ரைன் இராணுவ வீரர்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்கப்படும் என ரஸ்யா அறிவித்துள்ளது.
மொஸ்கோ நேரம் காலை 06:00 இலிருந்து இந்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக மொஸ்கோ தெரிவித்துள்ளது.
துறைமுக நகரான மரியுபோலை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக கூறும் ரஸ்ய படையினர், அசோவ்ஸ்டல் ஸ்டீல்வேர்க்ஸின் கோட்டையில் இருக்கும் சுமார் 2500 உக்ரைன் படையினர் ஆயுதங்களை களைந்து சரணடைந்தால், அவர்களின் உயிர்களுக்கு உத்தரவாதம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
அவ்வாறு செய்பவர்கள் ஜெனிவா போர்க் கைதிகள் தொடர்பான உடன்படிக்கையின்படி நடத்தப்படுவார்கள் என்றும் ரஸ்யாவின் பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏற்பாட்டின்படி, ரஸ்ய படையினர் காலை 06:00 மணிக்கு சிவப்புக் கொடிகளை உயர்த்துவர்
இதன்போது சரணடையும் உக்ரைனிய வீரர்கள் வெள்ளைக் கொடிகளை உயர்த்த வேண்டும் என்று அறிவிப்பை ரஸ்யா வெளியிட்டிருந்தது.
எனினும் உக்ரேனிய அதிகாரிகள் இந்த வாய்ப்பை ஏற்பது தொடர்பில் எவ்வித அறிவித்தலையும் விடுக்கவில்லை.