பிரிட்டனின் புகழ்பெற்ற சிறப்புப் படைப் பிரிவான எஸ்ஏஎஸ், கிய்வ் பிராந்தியத்தில் உக்ரைனிய வீரர்களுக்குப் பயிற்சி அளித்து வருவதாக உக்ரைனிய இராணுவ தரப்புக்கள் தெ டைம்ஸ் ஒஃப் லண்டனிடம் தெரிவித்துள்ளன.

இரண்டு கட்டளையகங்களின் அதிகாரிகள், கடந்த வாரமும் அதற்கு முந்தைய வாரமும் உக்ரைன் படையினருக்கு பயிற்சி அமர்வுகளை வழிநடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

NLAW என்ற பிரித்தானிய தாங்கி எதிர்ப்பு ஏவுகணை வகைகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பயிற்சியாளர்கள் காண்பித்ததாக உக்ரைனிய தளபதி ஒருவர் கூறியுள்ளார்.

இந்தநிலையில் முதன்முறையாக உக்ரைனில் உள்ள தரைப்படையுடன் பிரித்தானியப் படைவீரர்கள் சேவையாற்றிய தகவலை பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here