உக்ரைன் நகரமான மகரிவில் மொத்தம் 132 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக நகர முதல்வரை மேற்கோள் காட்டி உக்ரைன்ஸ்கா பிராவ்டா இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

ரஷ்யர்களால் கொல்லப்பட்ட 132 பொதுமக்களின் சடலங்களை தாம் மீட்டுள்ளதாக நகர முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

பெரும்பாலான சடலங்கள் பொதுவான புதைகுழிகளில் இருந்து தோண்டப்பட்டன. சில சடலங்கள் தெருக்களில் இருந்து மீட்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்காரிவ் நகரம் உக்ரைன் தநைகர் கியேவிற்கு மேற்கே 50 கிமீ தொலைவில் உள்ளது இங்கு போருக்கு முன்னர் சுமார் 15,000 மக்கள் வசித்து வந்தனர்.

இந்தநிலையில் அண்மைய வாரங்களில் நடந்த சண்டையை அடுத்து சனததொகை 1,000 ஆகக் குறைந்துள்ளதாகவும், மகரிவின் 40வீத கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் நகர முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யர்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், மருத்துவமனைகள் மற்றும் மழலையர் பாடசாலைகளை முற்றிலுமாக அழித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here