உக்ரைன் ஆக்கிரமிப்பு போரை முன்னெடுத்துச் செல்ல, ரஷ்யா, புதிய தளபதியை நியமித்துள்ளது.
சிரியாவில் போர் நடவடிக்கைகளில் விரிவான அனுபவம் பெற்ற புதிய ஜெனரல் ஒருவரே தற்போது களமிறக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் உக்ரைனில் அதன் நடவடிக்கைகளின் கட்டளையை ரஸ்யா மறுசீரமைத்துள்ளதை மேற்கத்திய அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
ரஷ்யாவின் தெற்கு இராணுவ மாவட்டத்தின் தளபதி ஜெனரல் அலெக்சாண்டர் டுவோர்னிகோவ் இப்போது படையெடுப்பிற்கு தலைமை தாங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தளபதிக்கு சிரியாவில், ரஷ்ய நடவடிக்கைகளின்போது நிறைய அனுபவம் உள்ளது.
எனவே ஒட்டுமொத்த கட்டளை மற்றும் கட்டுப்பாடு மேம்படும் என்று தாம் எதிர்பார்ப்படுகிறது.
படையெடுப்பில் 44 நாட்கள் ஆகியும் அதன் போர் நோக்கங்களை அடைய ரஸ்யா, இன்னும் போராடி வருகிறது,
இறுதியில் கிழக்கில் உள்ள டான்பாஸ் பகுதிக்கு அதன் பார்வையை திருப்புவதற்கு முன்னர் கிய்வ் போன்ற முக்கிய நகரங்களைக் கைப்பற்றத் தவறிவிட்டது.
100க்கும் குறைவான செயல்பாட்டு இராணுவப்பிரிவுகள், தந்திரோபாயக் குழுக்களை கொண்ட கணிசமான படையை ரஷ்யா கொண்டிருக்கிறது.
எனினும் எண்ணிக்கையில் குறைவான உக்ரைனிய படைப்பிரிவுகள் மிகவும் புத்திசாலித்தனமாகவும் ஆச்சரியமாகவும் செயற்படுவதாக மேற்கத்தைய அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.