இலங்கைக்கு வழங்குவதாக இந்தியா உறுதியளித்திருந்த ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனை பெற்றுக்கொள்வதில் நிச்சயமற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான உரிய திட்டங்களை முன்வைக்குமாறு ராஜபக்ச அரசாங்கத்திடம் இந்தியா கோரியுள்ளதாக கொழும்பை தளமாக கொண்ட ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள மூலோபாய திட்டங்களுக்கான பட்டியலை இலங்கையிடம் இந்தியா கோரியிருப்பதாக குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையிடம் இருந்து அதற்கான உத்தரவாதம் கிடைக்கும் வரை இந்தியாவிடம் இருந்து அவசர கடனை பெற்றுக்கொள்வதில் நிச்சயமற்ற நிலைமை காணப்படுகின்றது என்றும் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே 500 மில்லியன் டொலர்கள் கடனைப் பெற்றுக்கொள்வதற்கும் அவசர எரிபொருள், உணவு மற்றும் மருந்துகளுக்காக ஒரு பில்லியன் டொலர் கடனை பெறுவதற்குமான முயற்சியின் ஒரு பகுதியாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இந்தியா பயணம் செய்யவிருந்த போதிலும் இரண்டு தடவைகள் அந்தப் பயணங்கள் மீளெடுக்கப்பட்டிருந்தன.

எனினும் அந்தப் பயணம் மீண்டும் எப்போது இடம்பெறும் என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

இந்த நிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் எதிர்வரும் மார்ச் மாதம் 18 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், அது தொடர்பில் இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகம் இதுவரை உறுதியான தகவல் எதனையும் வெளியிடவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here