உக்ரைன் மீது ரஷ்ய தொடுத்திருந்த கடும் போர் நிலைமையயை தற்காலிகமாக முடிவுக்கு கொண்டும் வருகையில் உக்ரைன் அதிபர் அறிவிப்பு ஒன்றினை விடுத்துள்ளார்.
நான்காம் நாளான நேற்றைய தினமும் உக்கிர மோதல் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், ஜேர்மனி உட்பட 28 நாடுகள் உக்ரைனுக்கு உதவ தயார் என நேற்றுமுந்தினம் அறிவித்தன.
இதற்கிடையில், அணு ஆயுத தடுப்புக் குழுவினரை தயார் நிலையில் இருக்கும்படி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேற்று உத்தரவிட்டிருந்தார். எனினும் ரஷ்யாவின் அழைப்புக்கு அமைவாக பேச்சுவார்த்தைக்குத் தயார் என உக்ரைன் அதிபர் அறிவித்துள்ளார்.