உக்ரெய்னில் ரஸ்ய படையினரின் ஆக்கிரமிப்புக்கு எதிராக பொதுமக்கள் மத்தியில் தன்னார்வ படைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே சுயமாக முன்வருவோருக்கு ஆயுதங்கள் வழங்கப்படும் என்று உக்ரெய்ன் ஜனாதிபதி வெலிடிமிர் ஸெலன்ஸ்கி அறிவித்தி்ருந்தார்.
இதனையடுத்து தமது நகரங்களை ரஸ்ய படையினரிடம் இருந்து பாதுகாப்பற்காக பொது மக்கள் சிறிய வெடிப்பொருட்களை தயாரித்து வருகின்றனர்.
அத்துடன் அரசாங்கத்திடம் இருந்து ஆயுதங்களையும் பெற்றுள்ளனர் என்று பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
ஆயுதங்களுடன் தயாராகும் மக்கள் தமது நகரங்களை தாமே பாதுகாக்கப்போவதாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை உக்ரெய்னின் தெற்கில் உள்ள நோவா காக்ஹோவ்கா என்ற சிறிய நகரம் ரஸ்யாவின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதனையடுத்து உக்ரெய்ன் தேசியக்கொடிகளுக்கு பதிலாக கட்டிடங்களில் ரஸ்யக் கொடிகள் ஏற்றப்பட்டுள்ளதாக நகர முதல்வர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் வாஸ்கிவ் என்ற இடத்தில் எரிவாயு குதம் ஒன்று ரஸ்யாவின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
இதனையடுத்து நகரத்தில் அபாய ஒலி எழுப்பப்பட்டுள்ளது.