உக்ரைன் கார்கிவ் வீதிகளில் ரஸ்ய படையினருக்கும் உக்ரைன் படையினருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெறுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ரஷ்ய துருப்புக்கள் கடந்த சில மணி நேரத்தில் நகருக்குள் நுழைந்ததாக உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர்.
சமூக ஊடக காணொளிக் காட்சி ஒன்றில் ரஸ்யாவின் இரண்டு வாகனங்கள் நகருக்குள் பிரவேசித்த நிலையில் சண்டை ஆரம்பமாகிறது
இதனையடுத்து வாகனம் ஒன்று எரிவது காட்டப்படுகிறது,
எனினும் இந்த மோதல்களின் ஏற்பட்ட சேதம் தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை.
ஏற்கனவே கார்கிவ் அதிகாரிகள் இன்று காலை மக்களை தங்குமிடங்களில் இருந்து வெளியேறவேண்டாம் என்று எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.