ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள நிஜாம் பட்டினம் அருகே நேற்று வங்கக்கடலில் ஆளில்லாமல் காணப்பட்ட இலங்கையைச் சேர்ந்த மீன்பிடி படகு சிறிது சிறிதாக மூழ்கிக் கொண்டிருந்தது.

அதனை மீட்பதற்காகக் கடலோர காவல்படையினர் பெரும் முயற்சி எடுத்தனர். ஆனால் அதை மீட்க முடியவில்லை.

இந்த நிலையில் பெரிய படகு ஒன்றுடன் இன்று காலை மீண்டும் அங்கு சென்ற கடலோர காவல்படையினர் மூழ்கிக் கொண்டிருக்கும் இலங்கையைச் சேர்ந்த மீன்பிடி படகைக் கரைக்கு இழுத்து வருவதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று மதியத்திற்குள் இலங்கையைச் சேர்ந்த மீன்பிடி படகு கரைக்கு இழுத்து வரப்படும் என்று மீட்புக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Gallery Gallery Gallery Gallery

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here