பர்தா தொடர்பான மேல் முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க இந்திய உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

பர்தா அணியக்கூடாது என்ற உத்தரவை எதிர்த்து கர்நாடக மாணவிகள் சிலர், இந்திய உயர்நீதிமன்றில் மேல்முறையீடு செய்தனர்.

எனினும் பர்தா தொடர்பான மேல்முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க முடியாது.

அதேநேரம் கர்நாடகாவில் நடப்பதை கவனித்துக்கொண்டிருப்பதாகவும் உரிய நேரத்தில் இந்த மனு விசாரணை செய்யப்படும் என்று உயர்நீதிமன்ற நீதியரசர்கள் அறிவித்துள்ளனர்.

அத்துடன் பர்தா விவகாரத்தை தேசிய பிரச்சினையாக்க வேண்டாம் என்றும் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கர்நாடகாவின் பள்ளி ஒன்றில் சீருடை அணியுமாறு வழங்கப்பட்ட உத்தரவை அடுத்து, முஸ்லிம் மாணவிகள் பர்தாவை, அணிந்து வந்த நிலையில், இந்து மாணவிகள் காவித்துண்டை அணிந்து வந்தமை காரணமாக பதற்ற நிலை உருவானது.

இதனையடுத்தே கர்நாடகாவின் சில பள்ளி மாணவிகள், உயர்நீதிமன்றில் மனுவை தாக்கல் செய்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here