2015ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஏமன் உள்நாட்டு போரில் வான்வெளி தாக்குதலில் மட்டும் இதுவரை பொதுமக்கள் 18,000பேர் உயிரிழந்துள்ளனர் என ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.

மேலும், ஏமனில் தினமும் சராசரியாக 10 வான்வெளி தாக்குதல் நடப்பதாகவும், 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 23,000 வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏமன் உள்நாட்டு போரில் இதுவரை இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் அதில் வறுமை, பசி மற்றும் அடிப்படை வசதியின்மையால் மட்டும் ஒரு இலட்சம் பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஏமன் நாட்டில் ஜனாதிபதி மன்சூர் ஹாதி தலைமையிலான அரச படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2015ஆம் ஆண்டு முதல் சண்டை நடைபெற்று வருகிறது.

இந்த உள்நாட்டுப் போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஈரான் ஆதரிக்கிறது. அதேபோல் ஏமன் அரச படைகளுக்கு ஆதரவாக சவுதி தலைமையினான கூட்டுப்படைகள் வான்வழி தாக்குதல்களை நடத்திவருகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here