பிரான்ஸிலிருந்து ஆங்கில கால்வாய் ஊடாக பிரித்தானியா நோக்கி, பயணிக்க முயன்ற 56 அகதிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

கலைஸ், டன்கெர்க், பவுலோன் சுர் மெர் நகர கடற்பிராந்தியங்களில் ஒரே நாளில் நான்கு மீட்புப் பணிகளின் போது அவர்கள் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்களில் ஆறு சிறுவர்களும் நான்கு பெண்களும் அடங்குவர்.

சிறிய ஆபத்தான மீன்பிடி படகுகள் மூலம் குறித்த அகதிகள் பிரித்தானியா நோக்கி சென்ற போது கடற்பிராந்திய காவல்துறையினரால் இவர்கள் மீட்கப்பட்டனர்.

அண்மைய நாட்களில் பிரித்தானியா நோக்கி சட்டவிரோத பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்வடைந்துள்ளது.

கடந்த ஓகஸ்ட் 21ஆம் திகதி ஒரே நாளில் 828பேர் கடல்மார்க்கமாக பிரித்தானியா நோக்கி படையெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here