வடக்கு அயர்லாந்தில் மீள்குடியேறிய சில சிரிய அகதிகள் வறுமை மற்றும் அதிர்ச்சியின் அமைப்புக்குள் சிக்கியுள்ளனர் என்று ஒரு பொதுக்குழு தெரிவித்துள்ளது.

லண்டன்டரியில் உள்ள பெண்கள் மையத்தைச் சேர்ந்த ப்ரீஜ் மெக்பெர்சன், அங்குள்ள குடும்பங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டதாகக் கூறினார்.

மேலும், ‘குழுவுக்கு மொழி தடைகள் தொடர்ந்த பிரச்சனையாக உள்ளது. இவர்கள் நீண்டகால சுகாதாரத் தேவைகளைக் கொண்டவர்கள் மற்றும் பயங்கரமான அதிர்ச்சியை அனுபவித்தவர்கள்’ என கூறினார்.

வடக்கு அயர்லாந்தில் புலம்பெயர்ந்த மற்றும் இனக்குழுக்களின் அனுபவங்களை வடக்கு அயர்லாந்து விவகார குழு ஆராய்ந்து வருகிறது.

வடக்கு அயர்லாந்தில் 2016ஆம் ஆண்டிலிருந்து கிட்டத்தட்ட 2,000 சிரிய அகதிகள் பிரித்தானிய அரசாங்கத் திட்டத்தின் மூலம் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here