இந்தோனேசியாவில் தலைநகர் ஜகார்த்தாவின் புறநகரில் உள்ள சிறைச்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளனர்.

தங்கெராங் சிறையில் இன்று புதன்கிழமை அதிகாலை, பெரும்பாலான கைதிகள் உறங்கிக்கொண்டிருந்தபோது இந்த தீ விபத்து ஏற்பட்டது.

போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டிருந்த 122 கைதிகள் அங்கு அடைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த விபத்திற்கு மின்செயலிழப்பே காரணம் என தெரிவிக்கப்பட்டாலும் இது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இந்தோனேசிய சிறைகளில் அதிக எண்ணிக்கையிலான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளமையானது அங்கு தொடர்ச்சியான பிரச்சனையாக காணப்படுகின்றது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here