டெல்டா தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கான செயற்திட்டங்கள் குறித்து நாளை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவிக்கவிருக்கிறார்.

தடுப்பூசி போட்டுக்கொள்வோர் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்தும் அவர் பேசவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கோடைக்கால விடுமுறைக்குப் பிறகு மாணவர்கள் மீண்டும் பாடசாலைகளுக்கு திரும்பவுள்ள அதேவேளை ஊழியர்கள் வேலையிடங்களுக்குத் திரும்பவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இருப்பினும் அமெரிக்காவில் கொரோனா தொற்று அதிகரித்துவருகின்றது. குறிப்பாக ஒரு வாரத்தில், சராசரியாக 132,000க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியாகின்றது.

கடந்த மாதத்தைக் காட்டிலும், நாளாந்தம் கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை சுமார் 4 மடங்கு அதிகரித்து, சுமார் 1,500 ஆகப் பதிவானது.

அத்தோடு அமெரிக்காவில், கொரோனா தொற்றுக்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

குறிப்பாக 7 மாநிலங்களில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகமானோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here