பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதும் நாட்டில் அரசு மற்றும் நீதித்துறை முறையாக செயற்படாதது குறித்தும் அந்நாட்டை தளமாகக்கொண்ட சிவில் சமூக அமைப்பு  கவலை வெளியிட்டுள்ளது.

டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல், பாகிஸ்தான்  துணைத் தலைவர் ஜஸ்டிஸ் ஆர். நசீரா இக்பால் இதனை தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் ஆண்களும், பெண்களும் தோளோடு தோள் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என நாட்டின் நிறுவனர் தந்தை முஹம்மது அலி ஜின்னா விரும்பியபோதும் அவருடைய பார்வையில் செயற்பட நாங்கள் தவறிவிட்டோம் என கூறியுள்ளார்.

ஒரு வளமான பாகிஸ்தானுக்கு பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவது மிகவும் முக்கியம் எனும் அதேவேளை பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெண்களுடனான பாரபட்சமான நடத்தையை முடிவுக்குக் கொண்டுவர ஐ.நா. அளித்த வழிகாட்டுதல்களின்படி அரசாங்கம் செயற்படவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here