சுவிட்சர்லாந்தின் St. Gallen மாநிலத்தில் வசித்து வந்த இளைஞரை 5 மாநில பொலிசார் தேடி வந்த நிலையில் தற்போது கைதாகியுள்ளார்.

5 மாநிலங்களில் மொத்தமாக 60 திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 29 வயதான இளைஞர் கடைசியில் பொலிசாரிடம் சிக்கியுள்ளார்.

கடந்த 2019ல் பல மாதங்கள் தொடர்ச்சியாகவும், 2020ல் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்.

முக்கியமாக உயர்தர மிதிவண்டிகள் மற்றும் கார்களுக்கான முழுமையான சக்கரங்கள் என விலை உயர்ந்த பொருட்களை மட்டுமே கொள்ளையிட்டு வந்துள்ளார்.

மேலும், கொள்ளையிட்ட பொருட்களை உடனையே, செர்பியாவில் விற்பனை செய்து அதை பணமாக மாற்றியுள்ளார். இதுவரை அவர் கொள்ளையிட்ட மொத்த பொருட்களின் மதிப்பு மட்டும் சுமார் 355,000 பிராங்குகள் என தெரிய வந்துள்ளது.

St. Gallen மாநிலம் மட்டுமின்றி, Thurgau, Graubünden, Glarus, Appenzell Innerrhoden, Appenzell Ausserrhoden ஆகிய மாநிலங்களிலும் தனது கைவரிசையை காட்டியுள்ளார்.

தற்போது இந்த வழக்கு தொடர்பில் St. Gallen மாநில பொலிசார் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here