ஜேர்மனியில் டெல்டா வகை கொரோனா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசித் திட்டத்தில் மாற்றம் கொண்டுவருவது குறித்து ஜேர்மனி ஆலோசித்து வருகிறது.

அதாவது, தடுப்பூசியின் ஒரு டோஸுக்கும் அடுத்த டோஸுக்கும் இடையில் இடைவெளியை அதிகரிப்பது நன்மை பயக்கும் என்பது ஒரு பொதுவான கருத்து. அதாவது, ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுவிட்டு நேரம் கொடுப்பது உடலில் அதிக ஆன்டிபாடிகள் உருவாகுவதற்கு வழிவகுக்கும் என்பதாலும், இரண்டு டோஸ் தடுப்பூசியையும் ஒரே நபருக்கு போட்டுவிட்டால் எல்லாருக்கும் தடுப்பு மருந்து போதாது என்பதாலும் தடுப்பூசியின் ஒரு டோஸுக்கும் அடுத்த டோஸுக்கும் இடையில் இடைவெளி விடப்பட்டு வருகிறது. ஆனால், அதில் தற்போது ஒரு பிரச்சினை உருவாகியுள்ளது.

அதாவது, ஜேர்மனியில் டெல்டா வகை வைரஸ் தொற்று அதிகரித்துவரும் நிலையில், ஒரு டோஸ் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களையும் அது தாக்குவது தெரியவந்துள்ளது. ஆகவே, முதல் டோஸ் தடுப்பூசிக்கும் இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்கும் இடையிலான காலகட்டத்தைக் குறைப்பது குறித்து ஜேர்மன் சுகாதாரத்துறை வல்லுநர்கள் ஆலோசித்துவருகிறார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here