பிரித்தானியாவில் டெல்டா மாறுபாடு தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு வாரத்தில் 46% அதிகரித்துள்ளது என பிரித்தானியா பொது சுகாதாரம் (PHE) தெரிவித்துள்ளது.
கடந்த வாரத்திலிருந்து மேலும் புதிதாக 35,204 பேருக்கு டெல்டா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் விளைவாக பிரித்தானியாவில் டெல்டா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்தம் எண்ணிக்கை 1,11,157 ஆக அதிகரித்துள்ளது என PHE தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவில் உறுதிப்படுத்தப்பட்ட புதிய கொரோனா தொற்றுகளில் 95% டெல்டா மாறுபாடு என மிக சமீபத்திய தரவுகள் காட்டுகின்றன.
ஒட்டுமொத்தமாக1,02,019 பேர் இங்கிலாந்திலும், 7,738 பேர் ஸ்காட்லாந்திலும், 788 பேர் வேல்ஸிலும், 612 பேர் வடக்கு அயர்லாந்திலும் டெல்டா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த வாரம், டெல்டா மாறுபாடு பாதிப்பால் மேலும் 514 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 304 பேர் தடுப்பூசி போடாதவர்கள், 38 பேர் தடுப்பூசி போட்டு 21 நாட்களுக்குள் ஆனவர்கள், 54 பேர் தடுப்பூசி போட்டு 21 நாட்களுக்கு மேல் ஆனவர்கள் மற்றும் 106 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் ஆவர்.
முன்னர் பிரித்தானியாவில் தோன்றிய ஆல்பா மாறுபாட்டை விட டெல்டா மாறுபாடு 60% அதிகமாக பரவக்கூடியது என நிபுணர்கள் கூறியுள்ளனர்.