கென்யா நாட்டில் இடம்பெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் 17 இராணுவ வீரர்கள் உயிரிழங்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் ‘மில் மி-17’ ரகத்தை சேர்ந்தது.

சம்பவம் தொடரடபில் தெரியவருகையில்,

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று, கென்யா. அந்த நாட்டின் 23 இராணுவ வீரர்கள், வழக்கமான பயிற்சிக்காக ஒரு ஹெலிகாப்டரில் தலைநகர் நைரோபியில் இருந்து நேற்று புறப்பட்டனர்.

இந்த ஹெலிகாப்டர், நைரோபியின் புறநகரான ஓல்டிங்காவின் எரெமெட் பகுதியில் காலை சுமார் 8 மணிக்கு பறந்து கொண்டிருந்தபோது சற்றும் எதிர்பாராத வகையில் விபத்துக்குள்ளானது.

அந்த ஹெலிகாப்டர் விழுந்து தீப்பிடித்து எரிந்ததில் அதில் பயணம் செய்த 17 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 6 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.

இந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதின் பின்னணி குறித்து உடனடியாக தெரியவரவில்லை. விபத்துக்குள்ளான அந்த ஹெலிகாப்டர் ‘மில் மி-17’ ரகத்தை சேர்ந்தது என தகவல்கள் கூறுகின்றன.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here