2020ஆம் ஆண்டு யு.இ.எஃப்.ஏ யூரோ கிண்ண கால்பந்து தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

அந்த வகையில் நேற்று குழுநிலைப் போட்டிகளின் மூன்றாம் கட்ட போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளின் முடிவுகளை பார்க்கலாம்.

க்ரெஸ்டோவ்ஸ்கி விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில், பெல்ஜியம் மற்றும் ரஷ்யா அணிகள் மோதின.

குழு ‘பி’யில் நடைபெற்ற இப்போட்டியில் பெல்ஜியம் அணி 3-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

பெல்ஜியம் அணி சார்பில், ரோமேலு லுக்காக்கு 10ஆவது மற்றும் 88ஆவது நிமிடங்களில் என இரண்டு கோல்கள் அடித்தார். தோமஸ் மியுனீர் 34ஆவது நிமிடத்தில் இன்னொரு கோல் அடித்தார்.


பார்க்கென் விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில், டென்மார்க் அணியும் பின்லாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தின.

குழு ‘பி’யில் நடைபெற்ற இப்போட்டியில், பின்லாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

பின்லாந்து அணி சார்பில், ஜோயல் பொஜ்ஜன்பலோ 60ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.


வெம்ப்ளி விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில், இங்கிலாந்து அணியும் குரேஷியா அணியும் மோதின.

குழு ‘டி’யில் நடைபெற்ற இப்போட்டியில், இங்கிலாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

இங்கிலாந்து அணி சார்பில், ரஹீம் ஸ்டெர்லிங் 57ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.


ஆம்ஸ்டர்டாம் அரினா விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில், நெதர்லாந்து அணி, உக்ரேன் அணியை எதிர்கொண்டது.

குழு ‘சி’யில் நடைபெற்ற இப்போட்டியில், நெதர்லாந்து அணி 3-2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here