தூத்துக்குடி அருகே உள்ள தாளமுத்து நகர் முத்தரையர் கடற்கரை பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க வெளிநாட்டைச் சேர்ந்தவர் எனச் சந்தேகப்படும் நபர் ஒருவர் சுற்றி வருவதாக கியூ பிரிவு பொலிஸாருக்கு நேற்று வெள்ளிக்கிழமை (11) மாலை தகவல் கிடைத்துள்ளது.

இதை தொடர்ந்து கியூ பிரிவு பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ளனர்.

அங்கு சுற்றிக் கொண்டு இருந்த வரை மடக்கிப் பிடித்து கியூ பிரிவு பொலிஸார் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

அவர் இங்கிலாந்து பாஸ்போர்ட் மற்றும் இந்திய, இலங்கை பணமும் வைத்திருந்தமை தெரியவந்துள்ளது. விசாரணையில், பிடிபட்டவர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஜோனாதன் தோர்ன்(வயது- 47) என்பது தெரியவந்துள்ளது.

இவர் இந்தியா வாழ் வெளி நாட்டினருக்கான, ஓ.சி.ஐ. என்ற அட்டை வைத்து இருந்தார். இவர் கோவாவிலிருந்து விமானம் மூலம் பெங்களூருக்கு வந்துள்ளார்.

அங்கு இருந்து வாடகைக்கு கார் எடுத்துக் கொண்டு கடந்த 9 ஆம் திகதி தூத்துக்குடிக்கு வந்துள்ளார்.

தூத்துக்குடியில் உள்ள பிரபல ஹோட்டலில் தங்கி இருந்ததாகவும், பின்னர் தூத்துக்குடியிலிருந்து படகு மூலம் உரிய அனுமதியின்றி இலங்கைக்குச் செல்ல திட்டமிட்டு இருந்ததாகவும், இதற்காகக் கடற்கரையில் நின்ற போது பிடிபட்டுள்ளதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மும்பை மற்றும் கோவா பகுதிகளில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் 226 கிலோ ‘கேட்டமைன்’ போதைப்பொருளைப் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த வழக்கில் ஜோனாதன் தோர்ன் கைது செய்யப்பட்ட உள்ளார். 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை சிறையிலிருந்துள்ளார். பின்னர் பரோலில் வெளியில் வந்து உள்ளார்.

இவர் இதுவரை 60 நாடுகளுக்குச் சென்று இருப்பது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து கியூபிரிவு பொலிஸார் ஜோனாதன் தோர்ன் மீது கடவுச்சீட்டு முறைகேடு வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here