தமிழ்நாடு திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள் தொடர்ந்து 5-வது நாளாக இன்று 13.06.21 கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றார்கள்.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் சிறையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் அகதிகள் கடந்த 09.06.21 தங்கள் விடுதலையினை வலியுறுத்தி போராட்டத்தினை முன்னெடுத்தார்கள்.

5 ஆவது நாளாக போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இதில் விசாரணை கைதிகளாக சிறைப்படுத்தப்பட்டவர்கள் நீதிமன்ற பிணையில் வந்தவர்களை கைது செய்து மறுபடியும் சிறப்பு முகாமில் காலவரையின்றி எந்தவிதமான நீதிமன்ற நடவடிக்கையும் இல்லாது அடைத்து வைத்திருக்கின்றார்கள்.

அவர்கள் குடும்பங்களுடன் இருந்து வழக்கினை தொடர உதவுமாறு தமிழக அரசிடம் கோரிக்கை முன்வைத்து காத்திருப்பு போராட்டத்தினை நடத்திக்கொண்டிருக்கின்றார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here