வடக்கு எத்தியோப்பியாவில் பஞ்சம் இருப்பதாக ஐ.நா. மனிதாபிமானத் தலைவர் மார்க் லோகாக் தெரிவித்துள்ளார்.

இந்நிலமை குறித்து ஐ.நா. ஆதரவுடைய பகுப்பாய்வு அறிக்கையில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மார்க் லோகாக் கூறுகையில், ‘இப்போது பஞ்சம் உள்ளது. இது மிகவும் மோசமாகிவிடும்’ என தெரிவித்தார்.

போரினால் பாதிக்கப்பட்ட டைக்ரே பிராந்தியத்திலும், அண்டைய அம்ஹாரா மற்றும் அஃபாரிலும் 350,000 மக்கள் கடுமையான நெருக்கடியில் வாழ்ந்து வருவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

1.7 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில், அரசாங்கப் படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான சண்டையால் டைக்ரே பேரழிவிற்கு உள்ளாகியுள்ளது.

ஐ.நா.வின் உலக உணவு திட்டம், உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு மற்றும் குழந்தைகள் நிறுவனமான யுனிசெஃப் ஆகியவை நெருக்கடிக்கு தீர்வு காண அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளன.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here