தென்மேற்கு பாகிஸ்தானில் பேருந்தொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20பேர் உயிரிழந்துள்ளதோடு 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் உள்ள குஜ்தார் மாவட்டத்தின் கார்க் பகுதியில் இந்த விபத்து இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை சம்பவவித்துள்ளது.

ஒரு மத விழாவில் கலந்துக்கொண்டு திரும்பி வந்த யாத்ரீகர்களின் பேருந்து வீதியில் இருந்து விலகி பள்ளத்தில் குடைசாய்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரி கூறுகையில், ‘பேருந்து அதிக சுமை கொண்டதாக இருந்தது. பயணிகள் பேருந்தின் கூரையில் கூட பயணித்துக் கொண்டிருந்தனர்’ என கூறினார்.

காயமடைந்தவர்களில் குறைந்தது 10 பேரின் நிலை மோசமானது என்றும் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அறியப்படுகின்றது.

விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பதற்கான எவ்வித தகவலும் இல்லாத நிலையில், விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here