தம்மை விடுதலை செய்ய வேண்டும் இல்லையேல், கருணைக் கொலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி திருச்சி சிறப்பு முகாமில் உள்ள இலங்கை தமிழர்கள் உண்ணாவிரத போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றார்கள்.
இது குறித்து தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்கள்.
கடந்த நேற்றுமுன் தினம் தொடங்கிய போராட்டம் மூன்றாவது நாளாகவும் இன்று தொடர்ந்து வருகிறது.
இதன்போது போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறுகையில்,
எமது குடும்ப உறுப்பினர்கள் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் அவர்களை கவனிப்பதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும். தடுத்து வைக்கப்பட்டவர்களின் தண்டனைக் காலம் நிறைவுற்ற நிலையிலும் நாம் விடுவிக்கப்படவில்லை.
திருச்சி மத்திய சிறைமுகாமில் இலங்கைத் தமிழர்கள் 78 பேரும், நைஜீரியா மற்றும் இந்தோனேசியா நாடுகளை சேர்ந்த 108 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.