நாட்டின் தென்கிழக்கு பகுதிக்கு விஜயம் செய்து ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் மக்களை சந்தித்த போது பொதுமக்களில் ஒருவர் அவரை முகத்தில் தாக்கியுள்ளார்.
இந்த காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த நபர் தாக்கியமைக்கான காரணம் இதுவரை வெளிவராத நிலையில் விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.