கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை தடுக்கும் வகையில் அடுத்த இரு மாதங்களுக்கு மக்கள் கூட்டமாக ஒன்றுசேருவதை தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா தொற்றின் மூன்றாவது அலைக் குறித்து கருத்து தெரிவித்த மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலர் லாவ் அகர்வால் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘வரும் நாட்களில் கொரோனா தொற்றின் 3 ஆவது அலையை தவிர்க்க அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வரையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைவரும் உறுதியாக  கடைப்பிடிக்க வேண்டும்.

குறிப்பாக அடுத்த இரு மாதங்களுக்கு மக்கள் கூட்டமாக சேர்வதை தவிர்க்க வேண்டும். பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியதை அடுத்து பொது முடக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், இதை கடைப்பிடிப்பது அவசியமான ஒன்றாகும்’ என அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here