மாநிலங்களின் கையிருப்பில் 1.33 கோடி கொரோனா தடுப்பூசிகள் இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசின் சார்பில் இலவசமாக இதுவரை 25,06,41,440 கொரோனா தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளது.

அதில் 23,74,21,808 கொரோனா தடுப்பூசிகள் இதுவரை உபயோகிக்கப்பட்டுள்ளது. கையிருப்பில் 1 கோடியே 33 இலட்சத்து 68 ஆயிரத்து 727 தடுப்பூசிகள் உள்ளன. மேலும் மாநிலங்களுக்கு 3 இலட்சத்து 81 ஆயிரத்து 750 தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளன’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here