தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சீனா அமுல்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பிரித்தானியா வழங்கிய விசேட விசா திட்டத்திற்கு பல்லாயிரக்கணக்கான ஹொங்கொங் மக்கள் விண்ணப்பித்துள்ளனர்.

அந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டு லிவர்பூலில் சுதந்திர வாழ்வதற்காக ஒரு குடும்பம் பிரித்தானியாவிற்கு வந்துள்ளதாக ஸ்கை நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தங்கள் கருத்துக்களை அமைதியாக வெளிப்படுத்தும்போது அரசாங்கம் மாற்றங்களைச் செய்யும் என்ற நம்பிக்கை தமக்கு இருந்ததாகவும் இருப்பினும் இறுதியில், ஏமாற்றமடைந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதுவே ஹொங்கொங் நாட்டில் இருந்து வெளியேறுவதற்கு தூண்டுதலாக இருந்தது என்றும் குறித்த தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.

தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா ஹொங்கொங்கில் அமுல்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக போராடிய ஜனநாயக ஆதரவாளர்களில் ஒருவரான ஜோசுவா வோங் உட்பட இதுவரை 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here