அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மலாய் தீபகற்ப பகுதியில், சராசரி கடல் மட்டத்தில் இருந்து 5.8 கிலோமீட்டர் உயரத்தில் வளிமண்டல சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
இதனால், தெற்கு அந்தமான் மற்றும் அதை அண்டிய கடல் பகுதியில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதேவேளை தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த மண்டலத்தால் தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும் எனவும் அந்நிலையம் அறிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுச்சேரி, காரைக்கால், கள்ளக்குறிச்சி, நாமக்கல், சேலம், அரியலூர் மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எதிர்வு கூறியுள்ளது