ஜனாதிபதி தேர்தலில் தோல்வியை தழுவியுள்ள டொனால்ட் ட்ரம்ப், அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதாக மறைமுகமாக கூறியுள்ளார்.
வெள்ளை மாளிகையில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை தொடங்கி வைத்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலம் கூறுகையில், ‘இந்த 4 ஆண்டுகள் ஆச்சரியமானவையாக இருந்தது. நாங்கள் இன்னும் 4 ஆண்டுகளுக்கு இருக்க முயற்சி செய்கிறோம். இது இல்லையெனில் அதற்கு அடுத்த 4 ஆண்டுகளில் நான் உங்களை பார்ப்பேன்’ எனக் கூறினார்.
ட்ரம்பின் இந்த பேச்சு அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அவரின் விருப்பத்தை காட்டுவதோடு, தற்போதைய தேர்தலில் தனது தோல்வியை ஒப்புக்கொள்ள அவர் தயாராகி விட்டார் என்பதையும் காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இதனிடையே ஜனாதிபதி தேர்தலின் முடிவை மாற்றக்கூடிய அளவுக்கு மோசடி நடந்ததற்கான எந்த ஆதாரமும் அமெரிக்க நீதித்துறையால் கண்டுபிடிக்கப்படவில்லை என அந்த நாட்டின் அட்டார்னி ஜெனரல் வில்லியம் பார் தெரிவித்துள்ளார்.