வோல்கா பிராந்தியத்தில் 26  பெண்களைக் கொன்றதாக சந்தேகத்தின் பேரில் டடர்ஸ்தானில் ஒருவரை கைது செய்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“வோல்கா வெறி” என அழைக்கப்படும் குறித்த சம்பவத்தில் 2011 மற்றும் 2012 க்கு இடையில் ரஷ்யாவின் மத்திய, வோல்கா மற்றும் யூரல் மாவட்டங்களில் 26 பெண்கள் கொல்லப்பட்டனர்.

பல வருடங்களாக விசாரணைகள் இடம்பெற்ற நிலையில் 38 வயதான ஒருவரை கைது செய்துள்ளதாகவும் அவர் தனது குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை கடந்த ஆண்டுகளில் குறிப்பாக கடுமையான குற்றங்களைச் செய்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவர் டடர்ஸ்தானில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார் என விசாரணைக் குழு தெரிவித்தது.

தடயவியல் ஆராய்ச்சி மற்றும் உயிரியல் பொருள்கள் பகுப்பாய்வு மற்றும் சம்பவத்தின் பிற இடங்களில் காணப்பட்ட குற்றங்களின் பிற தடயங்களின் அடிப்படையில், அனைத்து செயல்களும் ஒரு நபரால் செய்யப்பட்டவை என்பது நிறுவப்பட்டது.

இந்நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள நபர் 2009 இல் திருட்டு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டார் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here