சந்திரனை ஆய்வு செய்வதற்காக சீனாவினால் அனுப்பப்பட்ட சங் -5 விண்கலம் வெற்றிகரமாக சந்திரனில் தரையிறங்கியுள்ளது.

அங்குள்ள பாறைகள் மற்றும் தூசுதுகள்களின் மாதிரிகளை சேகரித்துக்கொண்டு மீளவும் பூமிக்கு வரும் நோக்கத்துடன், ரோபோ தொழில்நுட்பம் கொண்ட இந்த விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது.

சந்திரனில் ஓசியனஸ் புரோசெல்லரம் என அறியப்படும் பிராந்தியத்திற்கு அருகிலுள்ள எரிமலை தொகுதியை ஆய்வு செய்வதே இந்த திட்டத்தின் இலக்காகும்.

அடுத்துவரும் சில தினங்களுக்கு சந்திரனில் இருந்து நிலத்தில் காணப்படும் பொருட்களை இந்த விண்கலம் சேகரிக்கவுள்ளது.

குறித்த விண்கலத்தில் கெமரா, ரேடர் உட்பட ஏராளமான நவீன உபகரணங்களும் கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன.

சுமார் 2 கிலோ மண் அல்லது பாறைப்படிவங்கள் பூமிக்கு கொண்டுவரப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன.

44 ஆண்டுகளுக்கு முன்னர் சோவியத் லூனா 24 திட்டத்தின் கீழ் சந்திரனிலிருந்து 200கிராம் மாதிரிகள் பூமிக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் பெற்ற உயர் அடைவாக இந்த திட்டம் நோக்கப்படுகின்றது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here