கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து சில மாநில முதல் அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) ஆலோசனை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கூட்டத்தில் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளவுள்ளார். அப்போது தமிழகத்துக்கு தேவையான கோரிக்கைகளை பிரதமரிடம் அவர் எடுத்துரைப்பார்.

இந்த கூட்டத்தில் கொரோனா தொற்றின் தற்போதைய நிலை, அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், தயார் நிலை, கொரோனா மேலாண்மை ஆகியவை பற்றி ஆலோசிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி அடிக்கடி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதன்போது மாநிலங்களின் கொரோனா நிலைவரம் குறித்து கேட்டறியும் அவர், அவற்றில் இருந்து மக்களை மீட்பதற்கான வழிமுறைகளையும் மாநிலங்களுக்கு கூறிவருகிறார் என்பது   குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here