உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக இதுவரை 14இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உலகில் மொத்தமாக 14இலட்சத்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் இதுவரை மொத்தமாக ஐந்து கோடியே 95இலட்சத்து 13ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றினால், பீடிக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர தற்போதுவரை நான்கு கோடியே 11இலட்சத்து 53ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித்த நாடாக அமெரிக்கா விளங்குகின்றது. அமெரிக்காவில் இதுவரை ஒரு கோடியே 27இலட்சத்துக்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு இலட்;சத்து 63ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here