கராச்சி ஒருநாள் இந்தியாவின் பகுதியாக இருக்கும் என மஹாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரான தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “ நாங்கள் அகண்ட பாரதம் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம். பாகிஸ்தானின் பெரிய நகரமான கராச்சி இந்தியாவின் ஒருபகுதியாக ஒருநாள் மாறும் என நாங்கள் நம்புகிறோம்.
அதற்கான நேரம் நிச்சயம் வரும். “லவ் ஜிஹாத்” என அழைப்பதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இதற்காக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எடுத்த முயற்சியை வரவேற்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள ‘கராச்சி ஸ்வீட்ஸ்’ என்ற கடையின் பெயருக்கு சிவசேனா தலைவர் ஆட்சேபனை தெரிவித்துள்ள நிலையில் பட்னாவிஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.