முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் இருவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் பேலியகொட சென்று வந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கைகள் இன்று வெளியாகியுள்ளன.
அவர்கள் இருவருக்கும் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் முல்லைத்தீவில் சில தினங்களுக்கு முன்னர் இருவருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
அவர்களும் பேலியகொட மீன் சந்தைக்குச் சென்று வந்தவர்களாவர்
