ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக்-5 தடுப்பூசியை இந்தியாவில் 100 தன்னார்வலர்கள் மீது செலுத்தி சோதனை செய்யவுள்ளதாக இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து ரஷ்ய நிறுவனம் ஒன்றிற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு வழங்கியுள்ள செவ்வியில் மேற்படி குறிப்பிடப்பட்டுள்ளது.

சோதனைகளை நடத்துவதற்கு  டி.சி.ஜி.ஐ அனுமதிவழங்கியுள்ளது. இருப்பினும்  சோதனை நடைபெறும் திகதி மற்றும் நேரம் குறித்து அந்த நிறுவனம் முடிவு செய்யும் என குறித்த செவ்வியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட கிளினிக்கல் பரிசோதனையில் 100 பேருக்கும், 3ம் கட்ட பரிசோதனையில் ஆயிரத்து 400 பேருக்கும் மருந்து செலுத்தி பரிசோதனை செய்யப்படும் என டொக்டர் ரெட்டிஸ் ஆய்வகம் கூறியதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here