குஜராத்தில் மூன்று முக்கிய திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று (சனிக்கிழமை) ஆரம்பித்து வைக்கிறார்.
குஜராத் விவசாயிகளுக்காக ‘கிசான் சூரியோதய யோஜனா’ திட்டத்தை பிரதமர் மோடி இன்று ஆரம்பித்து வைக்கிறார்.
‘கிசான் சூரியோதய யோஜனா’ என்பது பகலில் நீர்ப்பாசனத்திற்கு மின்சாரம் வழங்கும் திட்டமாகும். இந்த திட்டத்தின் கீழ், விவசாயிகள் அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை மின்சாரம் பெற முடியும்.
இது தவிர,சுற்றுலாவுக்காக கிர்னாரில் ரோப் கார் திட்டத்தையும் பிரதமர் மோடி ஆரம்பித்து வைக்கவுள்ளார். இது ஆரம்பத்தில் எட்டு பேரை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட 25-30 கேபின்களைக் கொண்டிருக்கும். இந்த ரோப்வே 7.5 நிமிடங்களில் 2.3 கிலோமீட்டர் தூரம் செல்லும். இந்த ரோப்வேயில் பயணம் செய்யும் போது கிர்னர் மலையைச் சுற்றியுள்ள இயற்கை அழகை சுற்றுலாப் பயணிகள் காண முடியும்.
மூன்றாவது திட்டமாக பிரதமர் மோடி யு.என். மேத்தா இருதயவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்துடன் தொடர்புடைய குழந்தை இதய மருத்துவமனையையும் திறந்து வைக்கிறார்.
மேலும், அகமதாபாத்தில் உள்ள சிவில் மருத்துவமனையில் டெலிகார்டியாலஜிக்கான மொபைல் திட்டத்தை திறந்து வைப்பார். உலகத் தரம் வாய்ந்த மருத்துவ உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவ வசதிகளுடன் கூடிய சில மருத்துவமனைகளில் யு.என் மேத்தா நிறுவனம் ஒன்றாகும்.
மேத்தா இருதயவியல் நிறுவனம் 470 கோடி ரூபாய் செலவில் விரிவுபடுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.