அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.

அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 81ஆயிரத்து 210பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 903பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் தொற்று பரவியதிலிருந்து அமெரிக்காவில் பதிவான நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால், அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித்த நாடாக விளங்கும் அமெரிக்காவில், இதுவரை மொத்தமாக, 87இலட்சத்து 46ஆயிரத்து 953பேர் பாதிக்கப்பட்டனர். இரண்டு இலட்சத்து 29ஆயிரத்து 284பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை 28இலட்சத்து 19ஆயிரத்து 508பேர் வைரஸ் தொற்றுக்காக, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 16ஆயிரத்து 323பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

அத்துடன் இதுவரை மொத்தமாக, 56இலட்சத்து 98ஆயிரத்து 161பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு  வீடு திரும்பியுள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here