இராஜதந்திர நடவடிக்கைகள் அடைப்பட்டதன் காரணமாக சவுதியிலிருந்து கனடா நோக்கிச் செல்லும் நேரடி விமான சேவைகளை நிறுத்தி விட சவுதி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனால், இரு நாடுகளுக்குமிடையிலான பயணங்களில் ஈடுபட்டுள்ள சவுதியர்கள் மாத்திரம் அல்லாது கனடா மக்களும் பாரிய அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனடா மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பலரை சவுதி அரசாங்கம் கைது செய்த போது, சவுதி அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை சவுதியிலுள்ள கனடா தூதரகம் கடுமையாக சாடியது முதல் சவுதிக்கும் கனடாவுக்கும் இடையிலான முறுகல் நிலைமை உருவாகியது.

இதனால், சவுதியிலுள்ள கனடா தூதுவரை வெளியேற்றுவதற்கும், கனடாவிலுள்ள சவுதியின் தூதுவரை திருப்பி அழைப்பதற்கும் சவுதி அரேபியா நடவடிக்கை எடுத்திருந்தது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here