டுபாய் நிறுவனமொன்றின் பணப் பெட்டியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 2 கோடி ரூபா பெறுமதியான அரிய வகையான நீல மாணிக்கக் கல் ஒன்றை திருடிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கை பாதுகாப்புப் பிரிவு அதிகாரியொருவர் டுபாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பணம் அனுப்பும் நிறுவனமொன்றில் பணி புரிந்த இந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் பாதணிப் பெட்டியொன்றுக்குள் வைத்து இந்த மாணிக்கக் கல்லை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

120 சந்தேகநபர்களிடம் மேற்கொண்ட விசாரணைகள் மற்றும் 8620 மணி நேர சீ.சீ.ரி.வீ. வீடியோ காட்சிகள் என்பவற்றின் பரிசோதனை என்பவற்றையடுத்தே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதி தொழில்நுட்ப கருவிகள் பொருத்தப்பட்டிருந்த இந்த நிறுவனத்தில் பணப் பெட்டியை திறந்தே இந்த மாணிக்கக் கல்லை எடுத்துள்ளார். பணப் பெட்டியின் இரகசிய இலக்கத்தை கண்டுபிடித்தே இந்த திருட்டை மேற்கொண்டுள்ளதாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இவர் டுபாயில் பணி புரியும் தனது உறவினர் ஒருவர் ஊடாக அந்த மாணிக்கக் கல்லை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here