திமுக தலைவர் , தமிழக முன்னாள் முதல்வர் , கருணாநிதிக்கு அரசின் சார்பில் மருத்துவ உதவிகளை வழங்குவதற்கு தயாராகவுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வரின் குடும்பத்தினர், கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் உதவிகளை வழங்குவதற்கு தயாராகவுள்ளதாக முதல்வர் இன்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார் .
இதேவேளை, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வைத்தியசாலைக்கு வருகை தந்து திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து மு.க.ஸ்டாலினிடம் விசாரித்துள்ளார்
அத்துடன் காங்கிரஸ் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களான குலாம் நபி ஆசாத் மற்றும் முகுல் வாஸ்னிக் ஆகியோர் வைத்தியசாலைக்கு வருகை தந்துள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் நலிவு ஏற்பட்டதை அடுத்து நால்வரை கொண்ட வைத்திய குழுவினரால் சிகிச்சை வழங்கப்பட்டது.
எனினும், இரத்த அழுத்தக்குறைவு காரணமாக மு. கருணாநிதி இன்று அதிகாலை தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
திமுக தலைவரை காண்பதற்கு ஏராளமான தொண்டர்கள் வைத்தியசாலை வளாகத்தில் குழுமியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், திமுக தலைவர் நலமாக உள்ளதாக தமிழக முதல்வர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.