இந்த நூற்றாண்டின் மிக நீளமான முழு சந்திரகிரகணம் நேற்று இரவு 11 மணி முதல் இன்று அதிகாலை 3.45 வரை தென்பட்டது.
ஆறு மணித்தியாலங்களும் 13 நிமிடங்களும் இந்த சந்திர கிரகணம் தோன்றியது.
சூரியன் பூமி மற்றும் சந்திரன் ஆகியோர் ஒரே நேர்கோட்டில்
பயணிக்கும்போது பூமியின் நிழல் சந்திரன் மீது படும்போது சந்திர கிரகணம் ஏற்படுகின்றது.
இந்த சந்திர கிரகணத்தை இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் நேரடியாக காணக்கூடிய வாய்ப்பு கிடைத்திருந்தது
சந்திர கிரகணம் இம்முறை சிவப்பு நிறமாக தென்பட்டதுடன் வளிமண்டல மாசடைவு இதற்கு பிரதான காரணமாகும்.