பாகிஸ்தான் பொதுத் தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென பாகிஸ்தானின் கட்சிகள் அறிவித்துள்ளன.

மீண்டும் தேர்தல் நடாத்தப்பட வேண்டுமெனவும் அவை கோரிக்ைக விடுத்துள்ளதாக அந்நாட்டு செ்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த கட்சிகள் ஒன்றாகக் கூடி எடுத்த தீர்மானத்திற்கமையவே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கட்சிகளில் இடம்பெற்றிருந்த முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி, முன்னதாக, தாம் எதிர்க்கட்சியாக செயற்பட தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தது.

இதேவேளை பொதுத்தேர்தலின் இறுதி முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை.

மொத்தமுள்ள 272 தொகுதிகளில் 3 தொகுதிகளின் முடிவுகள் இன்னும் வௌியாக வேண்டியுள்ளன.

அத்துடன் 2 தொகுதிகளின் முடிவுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

வௌியான முடிவுகளின்படி இம்ரான் கானின் தெஹ்ரீப் இ இன்சாப் கட்சி 115 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி 64 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது.

பெனாஸிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 43 தொகுதிகளைப் பெற்றுள்ளது.

இருப்பினும் எந்தவொரு கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்கவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here