வட கொரியாவின் அணுவாயுதக் களைவிற்கு கால அவகாசம் இல்லை எனக் கூறிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், குறித்த செயன்முறையை விரைவுபடுத்தவேண்டிய தேவை இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அணுவாயுதக் களைவு தொடர்பான செயன்முறையை மிக விரைவாக ஆரம்பிக்க வேண்டும் என ட்ரம்ப் முன்னர் கூறியிருந்ததில், இது ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது.

கடந்த மாதம் சிங்கப்பூரில் நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதிக்கும் வட கொரிய தலைவருக்கும் இடையிலான உச்சிமாநாட்டின்போது, கொரிய தீபகற்பத்தை அணுவாயுதமற்ற பிராந்தியதாக மாற்றுவதாக உறுதியளிக்கப்பட்டது.

ஆனால், அதைச் செயல்படுத்துவதற்கு அட்டவனையோ அல்லது கால அவகாசமோ இருக்கவில்லை.

ட்ரம்புக்கும் கிம்முக்கும் இடையிலான குறித்த உச்சிமாநாட்டிலிருந்து, அணுவாயுதக் களைவு தொடர்பில் சிறியதொரு முன்னேற்றம் காணப்பட்டதாகக் கூறப்பட்டது.

இந்தநிலையில், பியோங்யாங்குடனான பேச்சுவார்த்தை நல்லமுறையில் போவதாகக் கூறிய ட்ரம்ப், எம்மிடம் கால அவகாசம் ஒன்று இல்லை. வேகக் கட்டுப்பாடும் இல்லை என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here