பெட்ரோல், டீசல் விலை நேற்றைய விலையில் மாற்றமின்றி இன்றும் அதே விலையில் நீடித்து வருகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்தியாவில் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்படுகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இதன்படி, இன்று (ஜூலை-4) சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.78.40 காசுகளாக விற்பனை ஆகிறது. டீசல் விலை ஒரு லிட்டர் ரூ.71.12 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.