மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஊழல் குற்றச்சாட்டின் பெயரிலேயே அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக, அவரது வழக்கறிஞர் உறுதி செய்துள்ளனர்.

மலேசியாவில் கடந்த மே மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிவுகள் வெளியாகின. இதில், 60 ஆண்டுகளாக ஆளும் கட்சியாக இருந்து வந்த நஜீப் ரஸாக் தலைமையிலான பாரீசன் தேசிய கட்சி தோல்வி அடைந்தது.

அதனைத்தொடர்ந்து 92 வயதான மஹாதீர் முஹம்மத் புதிய பிரதமராக பதவியேற்றார்.

மஹாதீர் முஹம்மத் ஏற்கனவே மலேசியாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாகப் பிரதமராக பதவிவகித்தார், பின்னர் வயது முதிர்வு காரணமாக அரசியலில் இருந்து விலகி இருந்தார்.

மஹாதீர் முஹம்மதுக்கு பிறகு நேஷனல் கட்சியின் சார்பில் பிரதமர் பதவியை நஜீப் ரஸாக் வகித்தார். ஆனால் அவரது ஆட்சிக் காலத்தில் ஊழல் மிகுந்து காணப்பட்டது. இதன் காரணமாக மஹாதீர் முஹம்மத் தனது கட்சியில் இருந்து விலகி எதிர்க்கட்சி கூட்டணியுடன் இணைந்து ஆட்சியைப் பிடித்து மீண்டும் பிரதமரானார்.

அதன் பின்னர் மலேசிய அரசுக்குச் சொந்தமான மலேசியா மேம்பாட்டு நிறுவனத்தில் 4 ஆயிரத்து 700 கோடியை ஊழல் இடம்பெற்றுள்ளதாக நஜீப் ரஸாக் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த நிலை அவரும் அவரது குடும்பத்தாரும் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று நிலையில் இன்று நஜீப் ரஸாக் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here