கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த அரசாங்கத்தினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் 500 நாட்களாக மேற்கொள்ளபட்டாலும் தற்போதைய  அரசாங்கத்தால் இதுவரை எந்தவித காத்திரமான முடிவுகளும் மேற்கொள்ளப்படாத  நிலையில்  500 வது நாட்களாகியும் இலங்கையில் நீதி,  நியாயம் கிடைக்காமல் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின்  போராட்டம் தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்கும் வேளையில் அவர்களின் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் விதமாக நேற்று (01.07.2018 )அன்று பிரித்தானியாவில்  புலம்பெயர் தமிழர்களால் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த போராட்டத்தில் பெருமளவான தமிழ் மக்கள் கலந்து கொண்டும் கைகளில் காணமல் ஆக்கப்பட்டோரின் புகைப்படத்தை தாங்கிய படியும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக கோசம் எழுப்பினர். பல புலம்பெயர் அமைப்புக்கள் இப்போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியது குறிப்பிடத்தக்கது

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here